உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24.04.2025) முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  ஆரம்பிக்கப்பட்டு சுமூகமான முறையில் இடம் பெற்றுவருகின்றது.

இன்றுடன் இம் மாதம் 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், அரச நிறுவனங்கள், பொலிஸார், முப்படைகள், பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்கு விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நாட்களில் தங்கள் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்காக 11,554 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.