மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்!!

மட்டக்களப்பு -  வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை காரணமாக நாளை 26.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு காரியாலயம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இதனால் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, வவுணதீவு , பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை ) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நீர்ப்பாவனையாளர்களிற்கு நீர் வழங்கும் நடவடிக்கை தடைப்படும் என்பதை அறியத்தந்துள்ளனர்.

ஆகவே வழங்கப்படும் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து தங்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொதுமக்களிடம் வேண்டுகேள் விடுத்துள்ளார்.



Powered by Blogger.