துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளராக வேதநாயகம் ஜெகதீஸன் நியமனம்!!

துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரிவின் (நிருவாகம் மற்றும் நிதி) மேலதிக செயலாளராக வேதநாயகம் ஜெகதீஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து, பெருந்தெருக்கள்,  துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சில் போக்குவரத்து பிரிவின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிவந்த இலங்கை நிருவாக சேவையின் விஷேட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீஸன் கடந்த 2025.04.08 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளராக (நிருவாகம், நிதி) அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.




Powered by Blogger.