பொழுது போக்கிற்காக பாடி இறுதியில் ZEE தமிழில் பாடும் வாய்ப்பை பெற்ற திருகோணமலை இளைஞன்!!

பொழுது போக்கிற்காக பாடி  இறுதியில் ZEE தமிழில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் திருகோணமலை இளைஞர்.

கட்டுமான பணியின் போது பொழுது போக்கிற்க்காக பாடி புகழ்பெற்ற இளைஞன் இந்திய தொலைக்காட்சியான Zee தமிழில் சரிகமப  போட்டியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

திருகோணமலை முள்ளிப்பொத்தானை சேர்ந்த ஹரீஸ் எனும்  இளைஞன் கட்டிட கட்டுமாண பணிகளில் ஈடுபடும்போது பொழுது போக்கிற்காகவும் வேலை அலுப்பை நீக்கவும் தொடர்ந்து சினிமா பாடல்களை எந்த இசை ஞானமும் இல்லாது மிகத்திறமையாக பாடி இந்தியாவரை புகழ் பெற்றிருப்பது வரவேற்க்கத்தக்கதே.

ஒரே பாடலுக்குள் வாழ்க்கை மாறுவதை படங்களில் பாத்திருக்கிறோம் ஒரே பாடலால் தன் வாழ்க்கையையே மாற்றிய இளைஞன் இலங்கையைச் சேர்ந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.