தபால் சேவையின் ஊடாக சர்வதேச ரீதியில் பொதிகள் அனுப்பும் சேவை தொடர்பான EMS விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

சர்வதேச ரீதியில் தபால் சேவை ஊடாக பொதிகள் அனுப்பும் சேவை தொடர்பான தேசிய ரீதியிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு தேசிய ரீதியில் இடம் பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பிலும் விழிப்புணர்வூட்டும் பிரதான நிகழ்வு இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இன்று காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு பிரதான தபாலகத்தில் இருந்து ஆரம்பமாகிய விழிப்புணர்வு நடைபவனியானது காந்தி பூங்கா வரை பேரணியாக சென்றடைந்தது.

அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வானது, மட்டக்களப்பு பிரதம தபாலகத்தின் பிரதம தபால் அதிபர் எம்.ஜெயரட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வின் போது சர்வதேச ரீதியில் தபால் சேவை ஊடாக பொதிகளை அனுப்புவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான அறிவுறுத்தல் துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், அது தொடர்பான விளக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















Powered by Blogger.