மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட அறிவித்தல்!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று (கிரான்), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), ஏறாவூர்நகர்  (ஏறாவூர்) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் சமாதான நீதிவான்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 2025/03/08 திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணி ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூட மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சுதந்திர ஊடகவியலாளருமான சாமஸ்ரீ தேசமானிய உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம் பெறவுள்ளது.

இவ் ஒன்று கூடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் பிரதேச இணைப்பாளர்கள் தெரிவு நடைபெற உள்ளதால் அமைப்பில் ஏற்கனவே பதிவு செய்த சமாதான நீதிவான்களையும் புதிதாக பதிவு செய்யவுள்ள சமாதான நீதிவான்களையும் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்தோடு இதன் போது சமாதான நீதிவான்களுக்குள்ள இடர்பாடுகளை தீர்ப்பது மற்றும் சமூக நலத்திட்டங்கள் போன்ற மேலும் பல விடையங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு பல தீர்வுகளும் எட்டப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயலாளர் தேசகீர்த்தி சமூகஜோதி ரீ.லெட்சுமிகாந்தன் (JP) அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.



Powered by Blogger.