திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024 ம் ஆண்டில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை கலாசார மத்திய நிலையத்தில் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி. ஜகனிதா டெஸ்மன் தலைமையில் இன்று நடைபெற்றது. 

திறன்ழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர்பற்று உதவி  பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்  கலாசார உத்தியோகத்தர் திருமதி. அனுஜா மோகனதீபன். இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சுபாஷினி முகுந்தன். இந்து கலாசார உத்தியோகத்தர் தேவஅதிரன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் கிஸ்கந்தமுதலி, ஏறாவூர் நகர் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம்.மஹ்பூழ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன் மாணவர்கள் தமது கலை ஆற்றுகைகளையும் வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.














Post Comments

Powered by Blogger.