மட்டக்களப்பு எருவில் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழாவானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.02.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அ.வசீகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது க.பொ.த உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இதன் போது அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.