ஒரு தீப்பொறி இணையத்தள செய்தி சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு மைல் கல்லாக புதிய பரிணாமத்துடன் தீப்பொறி இணையத்தள செய்தி சேவை (03) திகதி மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முதலில் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது இணையத்தளத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்களான திரு.திருமதி ஹேமதேவன் தர்மிதா ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம விருந்தினரா உலக தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேச தலைவர் பொறியியலாளர் தங்கத்துரை மகிபா தேவன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அருட்தந்தையர்களான ஜோன் யோசப்மேரி, லோரன்ஸ் லோகநாதன், சீ.வி.அன்னதாஸ், மெருசன் ஹென்றிக் அடிகளாரும், கிழக்கு மாகாணத்திற்கான ஓய்வு  நிலை விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன், சிறுவர் சிறுகதை எழுத்தாளர் ஓ.கே.குணநாதன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் இணையத்தளம் மற்றும்  youtub Chanal என்பன அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், நடனக் கலைஞர்களின் அழகிய கண் கவர் நடனங்கள் அரங்கை அலங்கரித்ததுடன், அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.

வெகு விரைவில் வடகிழக்கு மாகாணங்களில் வார இதழாகவும் ஒரு தீப்பொறி வெளிவரயிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


















Powered by Blogger.