மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்திற்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (10) திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரவு தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முஹம்மட் சாலி நளீம், மாகாண மற்றும் மத்திய அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன் போது கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தின் போது விசேடமாக சட்டவிரோத சாராய உற்பத்தியை தடுப்பது, விவசாயிகளுக்கான உள்ளீடுகள் உரிய காலத்தில் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கான நிருணய நெல் விலை அரசினால் தீர்மாணிக்கப்பட்டும் இதுவரை அரச நெல் கொள்வனவு இடம் பெறவில்லை எனவும் சுகாதார துறை சார்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உள்ளிட்ட யானை வேலி பிரச்சனை, கல்வி பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை உள்ளிட்ட மேலும் பல பிரச்சனைகள் விரிவாக பேசப்பட்டு பல விடையங்களுக்கான தீர்வுகள் எட்டப்பட்டதுடன் அபிவிருத்திக் குழு தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இதன் போது மேலும் பல ஆலோசனைகளும் இதன் போது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.