ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக பறவைகளை கொலை செய்த காத்தான்குடி பகுதியை சேர்ந்த 3 நபர்கள் கொக்கட்டிசோலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்ந்து இலங்கை
நோக்கி படையெடுத்துவரும்
அரிய வகை பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம்.. இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்வது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கொக்கடிச்சோலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்ட நிலையில் பொலிசார் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டி சோலை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட மூவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.