மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த அறிக்கை - 14.01.2025
கிரான் பிரதேச செயலக பிரிவின் புலிபாஞ்சகல் பாதையில் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதனால் அந்த பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் போக்குவரத்துக்காக இயந்திர படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்தின் சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் ஆற்றினை அன்டியபிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மாவட்ட ஏ.எஸ்.எம்.சியாத் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.