முதலைகளால் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலா??

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த மழைவீழ்;ச்சி ஓய்ந்திருக்கின்ற நிலையில் கிராமியக் குளங்கள் மற்றும் ஆறுகளிலும்  நீர் நிரம்பியுள்ளன. இந்நிலையில் குறித்த நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களளப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவு பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளிக் குளத்தில் முதலைகள் அதிகளவு நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அக்குளத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளும் மீன் பிடியில் ஈடுபடுபவர்களும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள வெல்லாவெளி குளத்தில் மாத்திரம் சுமார் 07 இற்கு மேற்பட்ட முதலைகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து இவ்வாறு குளத்திற்கு முதலைகள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த குளம் மக்கள் குடியிருப்பையும் அண்மித்துள்ளதனால் பொதுமக்களும், அப்பகுதியில் இரவு வேளைகளில் பயணம் செய்யும் பிரயாணிகளும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்தோடு மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வாவியில் புளியந்தீவு பகுதியில் சஞ்சரித்து வாவியோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் ஆடு, மாடு போன்ற பெறுமதிமிக்க கால்நடைகளை வேட்டை யாடிவந்த சுமார் 20 அடி நீளமுள்ள இராட்சத முதலையொன்றை அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு வன ஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.