புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கு கடினபந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழக்கிவைப்பு!!

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கடினபந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவர்களின் கடினபந்து கிரிக்கெட்  விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால்  கோட்டமுனை கிராம விளையாட்டு கழகத்திற்கு முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைக்கான கடினபந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடினபந்து கிரிக்கெட் உபகரணங்களை கோட்ட முனை கிராம பணிப்பாளர் சபை உறுப்பினரும்  விளையாட்டு கழக தலைவருமான பேரின்ப ராஜா சடாட்சர ராஜா, கழக செயலாளர்  மற்றும் உறுப்பினர்கள் இணைந்து புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை  பிரதி அதிபர்  லாவன்யா சுதர்சன்  மற்றும் பாடசாலை மாணவிகளிடம் கையளித்துள்ளனர்.






Powered by Blogger.