மட்டக்களப்பில் பாடசாலை பெண் மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவை ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் பாடசாலை பெண் மாணவிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கும் பிரத்தியேக விசேட பஸ் சேவை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப் பேருந்து சேவையானது பாடசாலை பெண் மாணவிகளுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இச் சேவையானது சத்துருக்கொண்டான் முதல் மட்டக்களப்பு வரை பயணிக்குமெனவும், குறித்த சேவையானது ஜனவரி 15 ஆம் திகதி முதல் சத்துருக்கொண்டானிலிருந்து காலை 06.15 மணிக்கு தமது சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்ததுடன், இச்சேவையினை ஆரம்பிப்பதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலையின் முகாமையாளர் கந்தசாமி ஸ்ரீதரன் அவர்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.


Powered by Blogger.