சித்தாண்டி பிரதான வீதிக்கு வந்த யானையால் பரபரப்பு!!

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் உள்ள முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த யானையால் சித்தாண்டி பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று 01.01.2025 திகதி புத்தாண்டு தினத்தில் அதிகாலை 1.00 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த யானை பல சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதுடன், கைக்குழந்தை ஒன்றும் பெண்னொருவரும் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யானை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியை அண்மித்த பகுதியில் உலாவுவதுடன், தொடர்ந்தும் கிராம மக்கள் பதட்ட நிலையிலேயே உள்ளனர்.

கிராம மக்கள் இணைந்து யானையை துரத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.







Powered by Blogger.