“ஸ்கொட் UK” அமைப்பின் நிதி அனுசரணையில் LIFT நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் 03.12.2024 அன்று வழங்கப்பட்டது. காரை தீவு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலிலும், LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரனின் தலைமையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட காரைதீவு 6 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 95 குடும்பங்களிற்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான நிதியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “தமிழ் பேசும் மக்களின் நிரந்தர நிறுவனம்” எனப்படும் ஸ்கொட் அமைப்பினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வழங்கப்பட்ட பொதிகள் ஒவ்வொன்றும், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அளவில் உலக உணவுத்திட்டத்தின் நியமங்களுக்கேற்ற அளவுகளில் தயாரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இப் பொதியில் 5kg அரிசி, 3kg மா, 1/2kg சீனி, 1/2kg, பருப்பு, அரை லீட்டர் தேங்காய் எண்ணை, 1/2kg சோயா, 600g சமபோஷ, 200g பால் மா, 100g தேயிலை, 400g உப்பு ஆகிய 10 அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதாகவும் LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தார்.
இதன்போது LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரனினால் உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர்
பொறியியலாளர் ஜீ.அருணனிடம் கையளிக்கப்பட்டு பின்னர் நேரடியாக பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
குறித்த வேலைத்திட்டத்தில் கிராம சேவைகள் உத்தியோகத்தர் ஆர்.எஸ்தரன் உட்பட LIFT உத்தியோகத்தர்கள் பலரும் இணைந்து உலர் உணவுப் பொதிகளை விநியோகித்தனர்.