மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேசத்தில் மக்களுக்கான நிவாரணப்பணி Lift நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழர்களின் மருத்துவ நிறுவனம் (Medical Institute of Tamils - MIOT) இன் நிதி அனுசரணையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் மற்றும் நிதிப்பணிப்பாளர் நடராஜா ஜெபராஜ் ஆகியோரின் தலைமையிலும், பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தியின் வழிகாட்டலிலும் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், ஒரு வாரத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் 75 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
இதற்கு முன்னதாக மட்டக்களப்பில் LIFT நிறுவனத்தின் நிவாரணப்பணியின் ஆரம்பத்தின் அடையாளமாக இப்பொதிகள் மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரனிடம், LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரினால் கையளிக்கப்பட்டு வேலைத்திட்டம் மற்றும் பொதியின் விபரங்கள் என்பன விளக்கப்பட்டது.