முன்னால் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று குற்றப் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வே ந்தர் எஸ்.ரவீந்திரநாத் கடத்தி படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைக்காகவே தன்னை குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைத்திருந்ததாக கருணா அம்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.