வவுணதீவு பிரதேசத்தில் சிவன் அருள் வெள்ள நிவாரணப் பணி!!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஈச்சன்தீவு கிராமத்தில்  வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுணதீவு பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக ஈச்சன்தீவு கிராம உத்தியோகஸ்தரின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட 60  குடும்பங்களுக்குமான உலர் உணவுப்பொருட்கள் சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் வைத்தியர் ஜெ.நமசிவாயம் அவர்களின் 150000.00 ரூபா நிதி ஒழுங்கமைப்பில் சிவன் அருள் பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் கு.பவளசிங்கம் (வாணன்) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.








Powered by Blogger.