காத்தான்குடி மீடியாபோரத்தின் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் சினேகபூர்வ சந்திப்பு!!
காத்தான்குடி மீடியாபோரத்தின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்குமிடையில் சினேகபூர்வ சந்திப்பொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டிடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் காத்தான்குடி மீடியா போறத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையிலான போறத்தின் நிருவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன், எதிர்காலத்தில் மாவட்ட செயலகத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கு ஊடகத்துறை சார்ந்து தம்மாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்ததுடன், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதன் போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.