கிழக்கில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்புங்கள் - அ.மு.சே.உ தொழிற் சங்கம் ஆளுநருக்கு கடிதம்!!

கிழக்கு மாகாண சபையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்புங்கள் என அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் ஆளுநருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

சுமார் 350 வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இதில் 30% தற்போது சிறு பணியாளர்களாக கொண்டவர்களைக் கொண்டு நிரப்புதல் வேண்டும் என்றும், இது அவர்களின் பதவி உயர்விற்கான ஒரு வாய்ப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கடந்த மாதம் பரீட்சை நடத்தி பெறுபேறுகளை வெளியிட்டுள்ளமையும் இதற்கு முன்பு ஒரு தடவையும் ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும், வேறு மாகாணங்களிலும் ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி கிழக்கில் ஆட்கள் சேர்க்கப்படாததையும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் அதில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடம் நிரப்பப்படாததனால் சேவையில் உள்ளவர்கள் இடமாற்றம் பெறுவதற்கு தடங்கலாக இருப்பதுவும், வேலைப் பழு அதிகரித்திருப்பதுவும் குறித்த கடிதத்தில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Powered by Blogger.