இறந்தவர்களின் சமாதிகளில் தீபமேற்றிய ஊர் மக்கள்!!

கார்த்திகை தீபநாளை முன்னீட்டு  வருடாவருடம்  கலைவாணி கலைமன்றத்தினால்  ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

வழக்கம் போன்று இவ்வாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு கலை வாணி கலைமன்ற தலைவர் சு.டிலக்சன் தலைமையில் வாழைச்சேனை இந்து மையானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நூற்றுகனக்கான மக்கள் பங்கேற்றதுடன் கல்லறையில் உறங்கிகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அவர்களின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு கலைவானி கலைமன்ற உறுப்பினர்களின் பங்கேற்றலுடன் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான  விளக்குகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.