மட்டக்களப்பில் இடம் பெற்ற சாரணர் சங்க வருட இறுதி ஒன்றுகூடலும் சிறந்த சாரணர்களை கௌரவிக்கும் நிகழ்வும்!!

சாரணர் சங்கத்தில் இணைந்து சிறந்த முறையில் செயற்பட்ட சாரணர்களை கௌரவிக்கும் மாவட்ட  ஆணையாளர் விருது வழங்கல் நிகழ்வும் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வும் இன்று  (23) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பதில் மாவட்ட ஆணையாளர் அ.கார்மேகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபரும் சாரணர் சங்கத்தின் மாவட்ட தலைவருமாகி ஐஸ்டினா யுலேகா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

இதன் போது உதவி மாவட்ட ஆணையாளர்கள், மாவட்ட சாரண தலைவர்கள் சிலரும் தமக்கான நியமனக் கடிதங்களை பதில் மாவட்ட ஆணையாளர் அ.கார்மேகம் மற்றும் இலங்கை சாரணர் சங்க தலைமையகத்தின் ஆணையாளரும் கிழக்கு பிராந்திய சாரண ஆணையாளருமாகிய பி.சசிகுமார் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது சாரணர் சங்கத்தில் இணைந்து சிறந்த முறையில் செயற்பட்ட சாரணர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள், சாரண மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1917 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சாரணியர் இயக்கம் 107 வருடங்களை கடந்து 3000 சாரணர்களின் பங்களிப்புடன் சாரணர் இயக்கம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











Powered by Blogger.