மாண்புடன் கூடிய மாதவிடாய் எண்ணக்கருவினை பரவலாக்கும் நிகழ்ச்சி!!

மட்டக்களப்பில் சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் எனும் எண்ணக்கருவினை பரவலாக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிகர தாமோதரன்  தலைமையில் கல்லடி விபுலாநந்தர் வயோதிபர் இல்ல மண்டபத்தில் இன்று  (27) திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாண்புடன் கூடிய மாதவிடாய் எனும் எண்ணக்கருவினை பரவலாக்குவதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளவயது திருமணம், பாலியல் சிறுவர் துஸ்பிரயோகங்கள், போதைப்பொருள் பாவனை போன்ற சமுக நலிவு செயற்பாடுகளை குறைக்கும் நோக்கில் விழுது நிறுவனத்தினால் பல செயற்திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் போது பாடசாலை மாணவிகள் மற்றும் தொழில் புரியும் மாதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் பெண்களுக்கான சுகாதார  விழிப்புணர்வு, சிறுபராய திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட மீள்பாவிப்பிற்குரிய  அணையாடை (Pad)  தொடர்பான விளக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாந்தி, ஆசிரியர்கள், பொலிசார், பொது சுகாதார மருத்துவமாதுக்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய நிர்வாக உத்தியோகத்தர் கந்தன் நிர்மலா, விழுது உத்தியோகத்தர் பி.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Powered by Blogger.