மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர், வீதியில் இருட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதி, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்குண்ட இளைஞன் 26 வயதுடைய மாமாங்கம் பாடசாலை வீதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

எந்த விதமான ஒளிரும் சமிஞ்சைகளும் இல்லாது பாதி வீதி வரையிலும் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ள உரிமையாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது முதல் தடவை இல்லை என்றும், குறித்த வாகன உரிமையாளரின் அநேக வாகனங்கள் அந்த பொது வீதியில் தான் எப்போதும் நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



Powered by Blogger.