மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க “மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது – இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்” எனும் கருப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பு கல்லடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவின் உத்தியோகத்தர்கள், கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், கல்லடி – டச்பார் பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டதுடன், அதிகளவிலான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் இரத்த கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.