மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைத்தினால் அரசாங்கத்திடம் அறிக்கையொன்றின் ஊடாக கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினராகிய நாங்கள், 1991 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் பெண்களின் உரிமைகளுக்காகவும், பால்நிலை அடிப்படையிலான வன்முறைககளுக்கும் LGBTQIA+ நபர்கள் உட்பட விளிம்புநிலை சமூகங்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். எங்கள் பணியானது வன்முறையிலிருந்து பாதிப்புற்ற மற்றும் தப்பிப்பழைத்யவர்களுக்கும் முக்கியமான ஆதரவை வழங்குவதோடு, நமது சமூகத்தில் வன்முறை மற்றும் பாகுபாடுகளை அகற்றுவதற்கான முறையான மாற்றத்தை நோக்கி வேலை செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த ஆண்டு 2024, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தை குறிக்கும் வகையில், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் LGBTQIA+ நபர்களுக்கும் நடைபெறுகின்ற வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் உடனடியான மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசர மற்றும் குறிப்பிட்ட கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இந்தக் கோரிக்கைகள் வன்முறைக்குள்ளான, தப்பிப் பிழைத்தவர்களின் வாழும் உண்மைகளைப் பிரதிபலிக்கின்றன மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல், ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வன்முறைக்கான அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த முக்கியமான பரிந்துரைகளை பரிசீலித்து, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.