கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையின் வருடாந்த ஒளிவிழாவில் நடந்தது என்ன??

மட்டக்களப்பு - கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய மறை பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா . பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஒளிவிழாவின் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் அருட்தந்தையுமான நவரெட்ணம் (நவாஜி) அடிகளார் கலந்து சிறப்பித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அருட்தந்தை இயேசு சபைத்துறவி அனிஸ்டன் மொறாயஸ், இயேசு சபைத்துறவி அருட்தந்தை ஜோசப் மேரி, அருட்சகோதரர் பிரதீபன், முன்னால் பங்குத்தந்தை சுவைக்கின் ரொசான் அடிகளார், அருட்தந்தை போல் சற்குணம் அடிகளார் உள்ளிட்ட பல அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளும், அருட்சகோதரர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பங்கு மேற்புப்பணிச்சபை உறுப்பினர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள், இளைஞர் ஒன்றியத்தினர், பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள் என பலரும் இணைந்து சிறப்பித்தனர்.

அதிதிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களின் கலைப்படைப்புக்கள் அரங்கை அலங்கரித்திருந்ததுடன், அதிதிகள் உரை இடம்பெற்று, தேசிய ரீதியில் விபிலிய போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், மறைக்கல்வி மாணவர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

ஒளிவிழாவினை சிறப்பாக நடாத்தி முடித்த மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கும் பங்குமக்கள் சார்பில் பங்குத்தந்தை தமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.



















Powered by Blogger.