கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுதுனர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் நிறைவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேசமயம் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வாசலிலேயே சிலர் நிற்பதாகவும், உள்ளே அதிகாரிகள் உடனடியாக பெற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவிக்கும் சந்தர்ப்பங்களில் கூட, வெளியில் நிற்கும் நபர்களிடம் அதனை கூறினால் உடனடியாக அவர்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொடுப்பதாகவும் அங்குசென்ற சாதாரண குடிமகன் ஒருவர் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு பெற்றுக்கொடுப்பதற்கு 15000 – 7000 வரை அவர்கள் பணம் அறவிடுவதாகவும் தெரிவித்த அவர், வாசலில் பொலிஸார் இருந்தும் இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும், இலஞ்சமாக பணம் தருபவர்களுக்கு விரைவாக கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற காரணத்திற்காக பணம் இல்லாதவர்களின் நேரம் விரயமாக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.