ஊடகவியலாளர் சுமனுக்கு "இளம் கலைஞர்" விருது கிடைத்தது ஏன்??

ஊடகவியலாளர் சுமனுக்கு "இளம் கலைஞர்" விருது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதானது கூத்து ஆற்றுகைக்காக தங்கவேல் சுமனுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக இலக்கிய விழா 3 வருடங்களின் பின்னர் (11.12.2024) புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் 2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட பல துறைகள் சார்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது தங்கவேல் சுமன் சிறு வயது முதல் கூத்துக்கலையில் சிறப்பாக  ஈடுபட்டுவருகின்றதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் சுமன் தற்போது யாழ்ப்பாணத்தில் கெப்பிட்டல் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக  பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ்.ரத்நாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.