மாவட்டத்தில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது; எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் - அருண் ஹேமசந்திரன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என   மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன்  அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.  

பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரன் தலைமையில் இன்று (30) திகதி மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலோயே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மேற்கண்டவாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் இடம் பெற்ற .குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர்  பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஶ்ரீகாந்த்,  நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வனவிலங்கு பிரச்சனைகள், நீர்பாசனம், கனிய வள அகழ்வு, அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடையங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பாக அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், சில விடையங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உப குழுக்கள் நிர்ணயிக்கப்பட்டதுடன், அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்பட்டும் என தீர்மானம் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.