அஸ்வேசும திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களுக்கும் 6000 ரூபாவினை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ் மேற்கண்டவாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கம் மாணவர்களுக்கான 6000 ரூபாய் உதவியினை அஸ்வேசும ஊடாக வழங்க தீர்மானித்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் குறைந்த சம்பளத்தினை பெற்று வாழ்ந்து வரும் அரச உத்தியோகத்தர்களுக்கும் குறித்த திட்டத்தின் ஊடாக 6000 ரூபாவினை வட்டியில்லாத கடனாக வழங்க வேண்டும் என இதன்போது கேட்டுள்ளார்.