16 அடி முதலையை மடக்கிப்பிடித்த மட்டக்களப்பு மக்கள்!!

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில்  சுமார் 16 அடி நீளமான முதலையொன்று இன்று ஞாயிற்று கிழமை பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு வாவியில் சஞ்சரித்த குறித்த  முதலை இன்று மாலை கரைக்கு வந்ததுடன் புளியந்தீவு கிராமத்திற்குள் நுழைய முற்பட்ட போது இதனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் குறித்த முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குறித்த முதலை வேட்டையாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதுடன், குறித்த பகுதியில் உள்ள வாலியில் இம் முதலை சஞ்சரிப்பதனால் மீனவர்கள் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுக்க முடியாதுள்ளதனால் குறித்த முதலையை முதலைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு வண ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறித்த வாவிக்கு அண்மையில் வவுணதீவு பகுதியில்  ஒருவரை முதலை பிடித்ததனால் அவர் இறந்த சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.








Powered by Blogger.