பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தின் மூன்று தொகுதியிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் தமது பூரண ஆதரவை வழங்கிவருவதாக வவுணதீவு பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சமூக செயற்பாட்டாளரான சண்முகலிங்கம் சுரேஸ்குமாருக்கு (சம்சுங் சுரேஸ்) ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் மாவட்டத்தின் 3 தொகுதிகளிலும் மக்களாகவே முன்வந்து அவருடனாத சந்திப்புக்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்ததுடன், தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுமிடத்து இளைஞர் யுவதிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வறிய மக்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் போன்றவற்றை மேற்கொண்டு மாவட்டத்தை முன்னிலைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
குறித்த மக்கள் சந்திப்புக்களில் அதிகளவிலான இளைஞர் யுவதிகள், ஆலயங்களின் பிரதிநிதிகள், கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.