இது ஒரு தாழமுக்கமாக இருப்பதினால் மக்கள் பயப்படத் தேவையில்லை இருந்த போதிலும் முன்னாயத்த ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகுவதற்கான வாய்ப்பு இருக்கின்றமையினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவிற்கு அமைவாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய முன்னாயத்த ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவிலும் உள்ள சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த விடையங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். அதற்கு அமைவாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் வெள்ளம் ஏற்படக் கூடிய நிலை காணப்படும் வேளையில் அதை தடுப்பதற்கான விடையங்கள் மற்றும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கும் கொண்டு சென்று அவர்களுக்கு உரிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
குறிப்பாக இவ்வாறான வேளைகளில் அனைத்து திணைக்களங்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதற்கான திட்டங்களை அரசாங்க அதிபரின் ஆலோசனைக் அமைவாக ஏற்படுத்தி உள்ளோம்.
குறிப்பாக முப்படையினரும் பொலிசாரும் இணைந்து இவ்வாறான அனர்த்த நிலைகள் ஏற்படும் போது ஒன்றாக இணைந்து நிலைமைகளை சமாளிக்கக்கூடிய வாறான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக பொதுமக்கள் பதட்டம் அடைய தேவை இல்லை. அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம்.
குறிப்பாக மழை வேளைகளில் மரங்கள் முறிந்து விழலாம் அதனை கருத்திற்க் கொண்டு பொதுமக்கள் செயற்பட வேண்டும்.
அத்தோடு பொதுமக்கள் பீதிடையாமல் முன்னாயத்த ஏற்பாட்டுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், ஆழ்கடல் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லையென நாம் மாவட்ட மீன்பிடித் திணை களத்திற்கு அறிவித்துள்ளோம்.
நாளை திங்கட்கிழமை உயர்தர பரீட்சை ஆரம்பமாக இருப்பதால் அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளை ஒவ்வொரு பிரதேச செயலகம் மட்டத்திலும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஏதாவது அசௌகரியங்கள் இருக்குமாக இருந்தால் எங்களுடைய அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக இது ஒரு தாளமுக்கமாக இருப்பதினால் மக்கள் பயப்படத் தேவையில்லை இது கூடியளவான ஒரு மழை வீழ்ச்சியை கொண்டுவரக்கூடிய ஒரு நிகழ்வாகதான் இருக்கும் அதனால் வீணாக மக்கள் பயப்படத் தேவையில்லை.
மாவட்டத்தில் வாகரை, கிரான் வெல்லாவெளி, மட்டக்களப்பு நகர் போன்ற பிரிவுகளில் வழமையாக வெள்ளம் ஏற்படுவது உண்டு. அதனை கருத்திற் கொண்டு நாங்கள் விசேடமாக பல்வேறுபட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக கிரான், செங்கலடி, வெள்ளாவளி போன்ற பகுதிகளில் வெள்ள பிரச்சனைகள் சில வேளைகளில் ஏற்படுமாக இருந்தால் படகு சேவை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
தரை வழி பாதைகள் தடை படுமாக இருந்தால் இயந்திரம் படகுகள் மூலம் சேவையை வழங்க நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
முப்படை மற்றும் பொலிசார் இணைந்து கடமை ஆற்ற ஆயத்தமாக இருக்கின்றோம். வெள்ள முன்னாயத்த திட்டத்தை நாங்கள் தயார் படுத்தி, குறிப்பிட்ட அரசு நிறுவனங்களுடனும், அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து கடமையாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
உயர் தர பரீட்சை நிலையங்கள் யாவும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகாத இடங்களிலேயே உள்ளன. சில வேளைகளில் சில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டால் உயர் தர பரீட்சார்த்திகளை அழைத்துச் செல்வதற்கான படகு சேவையும் சில இடங்களில் உளவு இயந்திரம் மூலமும் அழைத்து வந்து பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களை அடையாளப்படுத்தி வைத்திருக்கின்றோம். குறித்த பாடசாலைகளில் தங்கம் வைக்க கூடிய அளவிலான எண்ணிக்கைக்கு ஏற்ப இடைத்தங்கள் முகாம்களை அமைத்து, அவர்களுக்கு தேவையான சமைத்த உணவையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு இருக்கின்றோம்.
அத்தோடு முகாம்களில் தங்கி இருந்தால் அவர்களுக்குரிய நிவாரண வசதிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார்.