ஓய்வுநிலை அதிபர் மற்றும் அவரது மனைவி நினைவாக அஞ்சல் தலை வெளியீடு!

பாவற்கொடீசேனை பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் அருளம்பலம் மாணிக்கப்போடி மற்றும் அவரது மனைவி ஶ்ரீகரதேவி அருளம்பலம் ஆகியோரை நினைவுகூர்ந்து அஞ்சல் தலையொன்று அண்மையில்  வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது "அருள்ஸ்ரீ" புலமைத் திட்டத்திற்காக 2024/2025 கல்வியாண்டில் அறிவியல் பாடங்களில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய மாணவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

இந்த மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் புலமைத் திட்டத்திற்கான உரிமம் ஆகியவற்றை

"அருள்ஸ்ரீ" அறக்கட்டளை ஸ்தாபகர் வைத்தியர் அருளம்பலம் பிரகாஷின் சார்பில் அறக்கட்டளை மட்டக்களப்பு பிரதிநிதிகள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜெயச்சந்திரன், பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர், மற்றும் அதிபர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.










Powered by Blogger.