உயர்தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது 2,312 பரீட்சை மையங்களிலும், 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் உள்ளது.



Powered by Blogger.