புதிய அமைச்சுக்களுக்கான பிரதியமைச்சர்கள் நியமனம்!!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

02. நாமல் கருணாரத்ன - விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்

03. வசந்த பியதிஸ்ஸ - கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

04. நலின் ஹெவகே - தொழிற்கல்வி பிரதி அமைச்சர்

05. ஆர். எம். ஜயவர்தன - வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

06. கமகெதர திசாநாயக்க - புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்

07 டி. பீ.சரத் - வீடமைப்பு பிரதி அமைச்சர்

08. ரத்ன கமகே - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்

09. மஹிந்த ஜயசிங்க - தொழில் பிரதி அமைச்சர்

10. அருண ஜயசேகர - பாதுகாப்பு பிரதி அமைச்சர்

11. அருண் ஹேமச்சந்திர - வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

12. அண்டன் ஜெயக்கொடி - சுற்றாடல் பிரதி அமைச்சர்

13. மொஹமட் முனீர் - தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்

14. பொறியியலாளர் எரங்க வீரரத்ன - டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

15. எரங்க குணசேகர - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

16. சதுரங்க அபேசிங்க - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

17. பொறியியலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

18. நாமல் சுதர்சன - பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்

19. ருவன் செனரத் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்

20. கலாநிதி பிரசன்ன குமார குணசேன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

21. டொக்டர் ஹன்சக விஜேமுனி - சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்

22. உபாலி சமரசிங்க - கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

23. ருவன் சமிந்த ரணசிங்க - சுற்றுலா பிரதி அமைச்சர்

24. சுகத் திலகரத்ன - விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

25. சுந்தரலிங்கம் பிரதீப் - பெருந்​தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்

26. சட்டத்தரணி சுனில் வட்டகல - பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர்

27. கலாநிதி மதுர செனவிரத்ன - கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்

28. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

29. கலாநிதி சுசில் ரணசிங்க - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

ஜனாதிபதியின்  செயலாளர்  கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன்போது கலந்து கொண்டார்.

 



Powered by Blogger.