எந்நேரமும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வுகூறல்!!

மட்டக்களப்பில் பரவலாக மழை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள நிகழ்வு, அம்பாறைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி தனது நகர்வை ஆரம்பித்திருக்கிறது.

இதே வேகத்தில் நகரும்போது இன்றிரவுக்குள் திருகோணமலைக்கு கிழக்கே 150கிமீ தொலைவு என்ற அளவில் நெருங்கிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் கிழக்கில் தற்போது பரவலாக கனமழை பெய்யத்தொடங்கியுள்ள நிலையில், வடக்கிலும் அடுத்துவரும் 36 மணிநேரங்களில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வுகூறப்படுகிறது.  (Red Alert continues...🔴)

Slow movement காரணமாக மழை தாமதமடைகிறது, தவிர ஆபத்து நீங்கவில்லை.குறிப்பாக வன்னியில் பெரும் குளங்களை அண்மித்து வாழும் மக்களுக்கு தேவையான அறிவித்தல்களை அலட்சியம் செய்யாமல் உடனுக்குடன் வழங்குவதால் உயிர்ச்சேதங்களை தவிர்க்கமுடியும்.!

26.11.2025 - 05.00 AM



Powered by Blogger.