மதுபான உற்பத்தியாளர்களுக்கான நிலுவைத் தொகையை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 நிறுவனங்கள் 8.5 பில்லியன் ரூபா தொகையை செலுத்தவேண்டியுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023-2024 ஆம் ஆண்டுக்கான மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய வரி நிலுவைத் தொகை மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் ரூபாவாகும்.
இதேவேளை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.