மட்டக்களப்பில் சூறாவளி!!

மட்டக்களப்பின் வரலாறில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளில் இற்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர் 23-11-1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி பாரிய அளவிலான உயிர் உடமை இழப்புக்களை மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. 

1978 நவம்பர் 23 வியாழக்கிழமை நண்பகலில் இருந்து காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி அன்றிரவு 8.30 மணியளவில் சற்றுத் தணிந்து, மீண்டும் வீசத் தொடங்கிய காற்று விடியும் வரை அகோரத் தாண்டவமாடி மட்டக்களப்பை சின்னா பின்னமாக்கி ஓய்ந்திருந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமார் 80 வீதமான மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்த ஒரு கொடிய சூறாவளி அது. அந்தச் சூறாவளியால் சின்னாபின்னமாகிப்போன மட்டக்களப்பு நகரின் சில காட்சிகள் இவை.







Powered by Blogger.