நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக போடியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜும் ஆ தொழுகையின் பின்னர் பொதுமக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினர்.
காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயல் இடம்பெற்ற இவ் விஷேட உரையில் “நீங்கள் விரும்பும் மாற்றத்தை வழங்கி ஒரு புது யுகத்தை நோக்கி பயணிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்”
காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கல்குடா தொகுதி மக்களுக்கு விஷேட நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் இளைஞர்கள் என்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பேன் என தெரிவித்ததுடன் மார்க்க ரீதியான முரண்பாடுகளைக் களைந்து பயணிப்பதுடன் புதிய யுகத்துக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொண்டு சேவையாற்றுவோம் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். நளீம் கலந்துகொண்டதுடன் விஷேட து ஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
(காத்தான்குடி செய்தியாளர்- எம்.பஹத் ஜுனைட்)