இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர்!

திருகோணமலை புல்மோட்டை மத்திய கல்லூரியின் இளம் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அவரது குடும்பத்தினர் மற்றும் பாடசாலை சமூகத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட 28 வயதையுடைய இளம் ஆசிரியரே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவரது மனைவி தமது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் இல்லை, எனவே "எங்கே எனது கணவர் உள்ளார்?" என்று பாடசாலை அதிபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்வையிட்ட போது அவர் உயிரற்ற நிலையிலும், உள்ளாடை மற்றும் காற்சட்டை என்பன அவிழ்ந்த நிலையிலும், கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதவானின் உத்தரவிற்கு இணங்க சடலம் சட்டவைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.




Powered by Blogger.