தில்லை ஆறு, சம்புக்களப்பு, கோணாவத்தை பிரதேசங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான தடைகளை நீக்கி சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தினைப் பார்வையிடுவதற்காக அப் பகுதிகளுக்கு அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கள விஜயமொன்றை சனிக்கிழமை (23) மேற்கொண்டார்.
இக்கள விஜயத்தின் போது அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் ராஜ்குமார் மற்றும் கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்கி உட்பட உயர் அதிகாரிகளும், அட்டாளைச்சேனை பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது தூய்மைப்படுத்தும் செயற்பாட்டினை உரியவாறு மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை அவர் பணியாளர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.