ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது மட்டக்களப்பை விட்டு சற்று மேலே சென்று விட்டது.
இந்த தாழமுக்கமானது தற்போது மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இது வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த ஆழ்ந்த தாழமுக்கமானது இதுவரை சூறாவளியாக மாறவில்லை.
நாளை இது சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.