அருட்தந்தை திருச்செல்வத்தின் இறுதிப் பயணம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம் பெற்றது!!

சமூக சேவையாளரும் அருட்தந்தையுமான அருட்பணி ஆர்.திருச்செல்வம் அவர்கள் திடீர் சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்த 13.11.2024 திகதி புதன்கிழமை இயற்கையெய்தியிருந்த நிலையில் அவரது இறுதிப் பயணம் இன்று இடம் பெற்றது.

மட்டக்களப்பு - வீச்சுக்கல்முனையை பிறப்பிடமாகவும் கொண்ட தற்போதைய தேற்றாத்தீவு பங்கின் பங்குத்தந்தை அருட்பணி ஆர்.திருச்செல்வம் அவர்களின் இறுதித்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரும் கொழும்பு மறைமாவட்ட துணை ஆயருமாகிய கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் தலைமையில் இன்று 16.11.2024  திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் புனித மரியாள் பேராலயத்தில் இடம் பெற்றது.

இதன் போது மட்டக்களப்பில் உள்ள அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பொது நிலையினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உற்றார் உறவினர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், பொது மக்கள் என பலரும் இறுதித் திருப்பலியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இன்று பி.ப 12.30 மணியளவில்  ஆலையடிச்சோலை மயானத்தில் அருட்தந்தையின் நல்லடக்கம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











Powered by Blogger.