வாக்களிக்கச் செல்லும் போது இவை கூடாது - தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் அறிவிப்பு!!

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, கூரிய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.



Powered by Blogger.