மட்டக்களப்பு முகத்துவாரத்தில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 2000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெல் வயல்கள் காட்டு வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதனால் மிகவும் பாதிக்கப்பட்டு அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதனை மாவட்ட செயலகம் உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுனரிடமும் மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டி வெள்ள நீரை வெளியேற்றித்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் அவர்கள் அதிகாரிகளை அனுப்பி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான விசேட கூட்டமொன்று மாவட்ட செயலகத்தில் நேற்று நடாத்தப்பட்டு ஆற்றுவாய் வெட்டுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (09) திகதி மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அதிகார சபையினரும் இணைந்து இன்று சனிக்கிழமை (09) திகதி மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆற்றுவாய் வெட்டும் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.