திறன் விருத்தி உளவளத்துணை சான்றிதழ் கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நெறிப்படுத்தலில் கீழ் பிரதேச செயலாளரின் ஆலோசனையில்  சவால்களை வெற்றி கொள்ளும் இளைய சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் கடந்த ஆரம்பிக்கப்பட்ட திறன் அபிவிருத்தி தொடர்பான சான்றிதழ் கற்கை நெறியின் இறுதி நாள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

48 மணித்தியாலங்கள் கொண்ட பயிற்சி நெறியில் 22 மாணவர்கள் திறம்பட நிறைவு செய்துள்ளனர்.

இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, குழந்தை நல வைத்தியர், மற்றும் பொது சுகாதார பரிசோதகர், உளவளத்துணை மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சுய திறன் மதீப்பீடு, அவசர நிலைமைகளின் போது செயற்படும் விதம், உள சுகாதாரம் மற்றும் குழந்தை விருத்தி, போதைப் பொருள் முற்தடுப்பு, இனப்பெருக்க சுகாதாரம், குடும்ப வாழ்க்கைக்கு ஆன்மீகம் போன்ற பல தலைப்புக்களில் இப்பயிற்சி நெறியினை தெளிவாக இலகுவான முறையில் சமூகத்திற்கு சென்றடையும் வகையில் தெளிவுபடுத்தினர்.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல்  பணிப்பாளர் எஸ்.தனுஜா  நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ரஊப்,  மற்றும் குழந்தை நல வைத்தியர் .பி.கமலநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அதிதிகளினால் இதன் போது சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.